Urimaikkaha Ezhu Thamizha 2025
- Tamilselvan Tamilarasan
- 7 uur geleden
- 1 minuten om te lezen
உரிமைக்காக எழு தமிழா-2025
திகதி: 23 சூன் 2025
இடம்: Brussels, பெல்சியம்
நேரம்: காலை 11:00 மணி
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதிகேட்டு பெல்சியம் தலைநகர் புருசலில் அமைந்துள்ள ஐரோப்பிய முன்றலில்,எதிர்வரும் 23.06.2025 அன்று மீண்டும் ஒருமுறை ஒன்றுகூடி உரிமைக்காக எழுதமிழா போராட்டத்தில் பங்கெடுப்போம். தமிழின உணர்வோடு ஓரணியாகி ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் பேரணியாகச் செல்வோம். வாருங்கள் இளையோரே! பெரியோரே! தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னெடுக்கப்படும் இப்பேரணியில் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இளையோர்கள் பெருமளவில் கலந்துகொண்டு,சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்பினை உலகிற்கு எடுத்துரைப்பது காலத்தின் கட்டாயமாகும். எமக்கான உரிமையை நாம்தான் போராடி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேசியத்தலைவரின் சிந்தனைக்கேற்ப, தமிழ் மக்களாகிய நாம் ஒருமித்த குரலாய் ஒன்றிணைந்து இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். உலகின் செவிப்பறைகள் அதிரும் வண்ணம் கொட்டொலிகளோடு நீதிகேட்போம்.தமிழீழமே எமக்கு வேண்டுமென்பதை இடித்துரைப்போம்.
எழுந்திடுங்கள்!
உணர்வெழுச்சியோடு பேரலையாக ஒன்றாகுவோம்.
தமிழ் இளையோர் அமைப்பு
Comments