இத்தாலியில் வல்திலானா (Valdilana) மாநகரசபை (Council) தேர்தலில், தமிழ் இளையோர் அமைப்பைச் (TYO) சார்ந்த செல்வி மதுஸ்யா குமரேசன் அவர்கள் வெற்றி பெற்று மாநகரசபை உறுப்பினராகத் (councillor) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் தேசியக்கட்சியான “Valdilana Insieme” என்னும் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழீழத் தமிழினத்தின் உரிமைப்போரின் நியாயங்களை உலகிற்கு எடுத்துக் கூறும் பணியில் தளராது தொடர்ந்தும் வீறுநடை போடும் மதுஸ்யாவிற்கு எமது உளமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்போமாக....
top of page
bottom of page
Comments